உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

செஞ்சி: செஞ்சி அடுத்த பெரியமூர் கிராமத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனையொட்டி ,கடந்த 11ம் தேதி காலை 10:00 மணிக்கு கலசஸ்தாபனமும், சுதர்சன ஹோமமும் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !