உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமேனி நாதர் கோயில் வருடாபிஷேக விழா

திருமேனி நாதர் கோயில் வருடாபிஷேக விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் திருமேனி நாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மூலவருக்கு வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் ஆனந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !