திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :939 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் நேற்று மூன்றாம் பிரகாரத்தில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும் தரிசனசக செய்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். மூன்றாம் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.