உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் முருகன் கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் சுவாமி தரிசனம்

திருச்செந்துார் முருகன் கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் சுவாமி தரிசனம்

திருச்செந்துார்: தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்துாருக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். இங்குள்ள தனியார் ரிச்சார்டில் தங்கினார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை முருகன்
கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் சண்முகவிலாச மண்டபத்தில் தாம்பூல பிரசாதம் கொடுத்து அர்ச்சகர்கள் வரவேற்றனர். பின்னர் கோவிலுக்கு சென்று அவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சன்னதியில் சுவாமி தரிசனம்
செய்தார். அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !