சாமிதோப்பில் பக்தர்கள் திரண்டனர்
ADDED :849 days ago
தென்தாமரைகுளம்; ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் திரண்டனர். அதிகாலை முதலே கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 4மணிக்கு நடை திறக்கப்பட்டது. உகப் படிப்பு, வாகன பணிவிடை நடந்தது. தொடர்ந்து சாமிதோப்பு குருபால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார். மாலை 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி அருள் பாலித்தார்.