உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துாரில் அலைமோதியது பக்தர்கள் கூட்டம்

திருச்செந்துாரில் அலைமோதியது பக்தர்கள் கூட்டம்

திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினமான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி
கோயில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் பகல்10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடந்தது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !