மானாமதுரை சோமநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
ADDED :841 days ago
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் கோயிலில் சோமநாதர் சன்னதிக்கு அருகில் உள்ள மாணிக்கவாசகர் சன்னதியில் அவரது குருபூஜை விழாவை முன்னிட்டு உற்சவர் சிலைக்கு அர்ச்சகர் ராஜேஷ் தலைமையிலான அர்ச்சகர்கள் 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவை ஒட்டி மகளிர் உழவாரப்பணி குழுவினரைச் சேர்ந்த ஏராளமான மகளிர்கள் மாணிக்கவாசகரின் பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.