உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் மந்தையம்மன் பொங்கல் விழா

பேரையூர் மந்தையம்மன் பொங்கல் விழா

பேரையூர்: பேரையூர் மந்தையம்மன் கோவில் பொங்கல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், பக்தர்கள் மாவிளக்கு மற்றும் பால்குடம் எடுத்து வந்து நேத்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !