உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை சித்தி விநாயகர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை சித்தி விநாயகர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை: சாய்பாபா காலனி சிந்தாமணி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள நடராஜப் பெருமான் மற்றும் சிவகாமி தாயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கோவிலின் முகப்பில் நடராஜப் பெருமான், சிவகாமி தாயார் உருவச் சிலைகளுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !