செப்பறை அழகியகூத்தர் கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சன விழா
ADDED :849 days ago
திருநெல்வேலி: நெல்லை அருகே ராஜவல்லிபுரம், செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனிஉத்திர திருமஞ்சன விழா நடந்தது. கோயிலில் கடந்த 16ம் தேதி ஆனிஉத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடந்தன. தினமும் காலை, மாலையில் கட்டளைதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 9ம் திருநாளில் அழகியகூத்தர் திருத்தேரில் வலம் வந்தார். 10ம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான ஆனிஉத்திர விழா நடந்தது. காலையில் சுவாமிக்கு மகா அபிஷேகம், மதியம் நடன தீபாராதனை, அழகியகூத்தர் திருவீதியுலா நடந்தது. இரவில் பிற்கால அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர்தாமிர சபைக்கு எழுந்தருளல் நடந்தது.