உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரம்பா பூஜித்த சிவலிங்கம்

ரம்பா பூஜித்த சிவலிங்கம்

சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ‘எலுமினியன் கோட்டூர்’ எனப்படுகிறது. தேவலோக பெண்ணான ரம்பா வழிபாடு செய்த சிவலிங்கம் சுயம்புமூர்த்தியாக இங்குள்ளார். இக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி வலது கையால் சின்முத்திரை காட்டியபடி கையை மார்பில் நிறுத்தி இருக்கிறார். இவரது கைகளில் சூலம், ருத்ராட்ச மாலை தாங்கியிருக்கிறார். மூன்று வியாழக்கிழமைகளில் இவரை தரிசித்தால் கல்வி வளர்ச்சி ஏற்படும். இக்கோயிலை 21 முறை வலம் வந்தால் விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !