ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்: ஆலமரத்திற்கு பூரண கும்ப மரியாதை
ADDED :909 days ago
கூடலுார்: குள்ளப்பகவுண்டன்பட்டியில் ஆலமரத்து ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
பல நூற்றாண்டுகளைக் கடந்த இக்கோயிலில் ஆலமரத்திற்கு பூரண கும்ப மரியாதை செலுத்தி மக்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக யாக சாலை அமைத்து வேதாச்சாரியார்களின் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. சுவாமி ஈஸ்வரன் பீடத்தில் விசேஷ பூஜைகள் நடத்தி ஆல மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து கும்ப மரியாதைக்குப்பின் புனித நீர் ஊற்றப்பட்டது. கோயிலில் கும்பம் வைத்து கும்பாபிஷேகம் செய்யாமல் கோயிலோடு இணைந்து வளரும் ஆலமரத்திற்கு பூரண கும்பம் மரியாதை செலுத்தி புனித நீர் ஊற்றியதைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.