உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

அன்னூர் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நடந்தது. அன்னூரில் உள்ள பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு, விஸ்வக்சேனா ஆராதனை நடந்தது. இதையடுத்து, மகா சுதர்சன ஹோமம் துவங்கியது. பூர்ணாகுதியும், திருமஞ்சனமும் நடந்தது. இதைத் தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சக்கரத்தாழ்வார் கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !