உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் சாமி தரிசனம் ; போலீசார் குவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் சாமி தரிசனம் ; போலீசார் குவிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திரு மஞ்சன தரிசன திருவிழா கடந்த 17 துவங்கி நேற்று வரை நடந்தது. விழாவையொட்டி கடந்த 24 முதல் 27 வரை 4 நாட்கள், கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து, தீட்சிதர்கள் சார்பில் அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி அறிவிப்பு பலகையை அகற்ற சென்ற தில்லைகாளி கோவில் செயல் அலுவலர் சரண்யாவிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து 26 ம் தேதி மாலை தரிசன விழா முடிந்த 2 மணி நேரத்திற்கு பின் சுமார் 4.30 மணியளவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறையினர் அதிடியாக கோவிலுக்குள் சென்று நடராஜர் சன்னதியில் மாட்டப்படிருந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க தீட்சிதர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அறிவிப்பு பலகை அகற்றப்பட்டும், பக்தர்களுக்கான கதவு திறக்காததால் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் போனது. அப்போது அங்கு பூஜை பணியில் இருந்த பூஜைதாரர் கற்பக கணேசன்,32; தீட்சிதர் தடுத்தபோது, அவரை தள்ளிவிட்டு சாமி தரினம் செய்து I திரும்பினர், சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போராடியவர்கள், இந்த வழியாக சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து கீழை இறங்கினர் இதனால் கோவில் வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் இருந்த இரு பிரிவினரையும் போலீசார் வெளியேற்றினர். இந்நிலையில் 27ஆம் தேதி காலையில் இருந்தே போலீசார் நடராஜர் கோவிலுக்குள் குவிந்தனர். இன்றும் கனகசபையில் பக்தர்கள் அனுமதிக்காததால், அறநிலையத்துறை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கோவில் பொது தீட்சதர்களிடம் பக்தர்களை மேலே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசி வந்தனர். தீட்சதர்கள் அதனை ஏற்காமல், நடராஜ சன்னதியின் உள்ள இரண்டு நுழைவு வாயிலையும் மூடி வைத்தனர்.

மதியத்தில் இருந்து அனுமதி கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த ராதாகிருஷ்ணன் தலைமையில், 15 க்கும் மேற்பட்டோர் நடை கதவை திறக்க கோரி கனகசபை வாயிற்படிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த பா.ஜ., வினர் மாவட்ட தலைவர் மருதை தலைமையில் கோவிலுக்குள் வந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போவிசார்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஒரு புறம் சுவாமி தரிசனம் வேண்டி ஒரு பிரிவு போராடி வரும் நிலையில், தீட்சிதர்களுக்கு ஆதரவாக பா.ஜ.வினர் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு . மேலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், பக்தர்கள் ஏறி செல்லும் படி அருகே போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மற்றொறு கதவு மூலமாக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிரடியாக கனகசபை மீது ஏறி சென்று, நடராஜரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !