உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் பழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பழனி ஆண்டவர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 3:30 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயில் வீதிகளை சுற்றி வந்தனர். பின்னர் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோ பூஜை, கன்னி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உட்பட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பழனியாண்டவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !