உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்: பணிகள் தீவிரம்

கிருஷ்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்: பணிகள் தீவிரம்

பெ.நா.பாளையம்:  துடியலூர் அருகே பன்னிமடையில் உள்ள கிருஷ்ணசாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பன்னிமடையில் ஊரின் நடுவே பழமையான கிருஷ்ணசாமி கோவில் வளாகத்தில் செல்வ விநாயகர் மற்றும் உலகளந்த பெருமாள் கோவில்கள் உள்ளன. கோயில் பழைய கட்டுமான அடிப்படையில் செங்கல், கருங்கல் ஆகியவற்றுடன் காரை சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. அதனுடன் கனமான மரபலகைகளும் பயன்படுத்தப்பட்டு இருந்தன. கருவறை கருங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மீது பெரிய கனமான மரப்பலகைகளை வைத்து, அதன் மீது விமானம் எழுப்பப்பட்டிருந்தது. கோயில்கள் புனரமைக்கப்பட்டு கடந்த, 2006 ம் ஆண்டு செப்.,ல், 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவில் மீண்டும் புனரமைக்கப்பட்டு கோவில் முன்புறம் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல கோயிலின் உட்புறம் தரையில் கருங்கற்கள், கிரானைட் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. இதே போல கருவறையின் உட்புறம், முன் மண்டபத்தின் மேல் பகுதி ஆகியவையும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !