உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி ஆனி மாத வழிபாடு; ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி ஆனி மாத வழிபாடு; ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக ஜூலை 1 முதல் 4 ந்தேதி முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை 1 பிரதோஷம், ஜூலை 3 பவுர்ணமி வழிபாட்டினை முன்னிட்டு, காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து காணப்படுவதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !