மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
ADDED :835 days ago
திருப்புவனம்: திருப்புவனம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஒன்பது உண்டியல்கள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் தன்னார்வலர்கள் , கோயில் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் ஒன்பது உண்டியல்களில் 22 லட்சத்து 59 ஆயிரத்து 501 ரூபாயும் 194 கிராம் தங்கமும், 265 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.