உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணமார் சாமி கோயில் விழாவில் வள்ளி கும்மியாட்டம்

அண்ணமார் சாமி கோயில் விழாவில் வள்ளி கும்மியாட்டம்

ஆயக்குடி: பழநி, அருகே அமர பூண்டியில் அண்ணமார் சாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பழநி, அருகே அமரபூண்டி கிராமத்தில் அண்ணமார்சாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன்.28 ல் விநாயகர் பூஜை உடன் முதல் காலயாக பூஜை துவங்கியது. அதன் பின் ஜூன் 29 இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் ஜூன் 27, 28 இரவில், ல் வேலராசி கலை குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டனர். பழநி, அமர பூண்டி, வயலூர், தாழையூத்து, நரிக்கல்பட்டி, பூலாம்பட்டி பகுதிகளில் வள்ளி கும்மியாட்ட பயிற்சிகளில் அதிக நபர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !