கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED :1161 days ago
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ஆனி மாதம் பவுர்ணமி பூஜை நடந்தது. கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயில், பாலசுப்பிரமணியம் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.