உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கும்பாபிஷேக தீர்த்தக்காவடி ஊர்வலம்

தாண்டிக்குடி பாலமுருகன் கும்பாபிஷேக தீர்த்தக்காவடி ஊர்வலம்

தாண்டிக்குடி , தாண்டிக்குடி பாலமுருகன் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த கலசம் எடுத்து ஊர்வலம் வந்தனர். தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 5ஆம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து திருச்செந்தூர், கொடுமுடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, அழகர் கோயில், பாண்டி கோயில், மீனாட்சி அம்மன் கோயில், கதவுமலை, பழநி, தலையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புனித தீர்த்தங்களை கலசங்களில் எடுத்து வந்தனர். தொடர்ந்து விநாயகர் கோயிலில் இருந்து முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தாண்டிக்குடி முருகன் கோயிலில் இன்று மூன்று கால யாகசாலையில் முதல் யாகசாலை பூஜை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !