உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி பவுர்ணமி : திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

ஆனி பவுர்ணமி : திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். இந்நிலையில், ஆனி மாத பவுர்ணமி திதி இன்று இரவு, 7:45 மணி முதல், நாளை மாலை, 5:49 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்பதால், ஏராளமான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டனர். பின்னர், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசையில் நின்று ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !