உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொம்மைய பெருமாள், பெத்தக்கம்மாள் கோயிலில் மாலைத் தாண்டுதல் விழா

பொம்மைய பெருமாள், பெத்தக்கம்மாள் கோயிலில் மாலைத் தாண்டுதல் விழா

வடமதுரை: வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்த சேர்வைகாரன்பட்டியில் இராஜ கம்பளத்தினருக்கு பாத்தியப்பட்ட பொம்மைய பெருமாள், பெத்தக்கம்மாள் கோயிலில் மாலைத் தாண்டுதல் திருவிழா நடந்தது. ஜூலை 2 இரவு துவங்கிய விழாவில் நேற்றுமுன்தினம் தேவதுந்தமி முழங்க ஆபரண பெட்டி அழைத்து வரப்பட்டது. இரவு தேவர், சேர்வை, பொய்க்கால் குதிரை, கும்மி ஆட்டங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை பெருமாளுக்கு பொங்கல் வைத்து கோயில் வீடு முன்பாக பால் பூஜை நடந்தது. இதை தொடர்ந்து மந்தையர்கள் சந்திப்பு, விலவை கூடை அழைப்பு, பொதிகல்லை எடுத்தல் போன்ற பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சலகருது எனப்படும் கோயில் காளைகளின் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் திண்டுக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 200 மாடுகள் பங்கேற்றதில் கரூர் மாவட்டம் வில்வமரத்துபட்டியை சேர்ந்த கடுதுார் மாதாநாயக்கர் மந்தையை சேர்ந்த மாடு முதலிடம் பெற்றது. விழா ஏற்பாட்டினை சேர்வைகாரன்பட்டி, புதுக்கொம்பேறிபட்டி, அரவங்குறிச்சி, பாப்பிநாயக்கன்பட்டி ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !