கேதர்நாத் கோவில் வளாகத்தில் வீடியோ எடுக்க தடை
ADDED :901 days ago
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத் கோவிலைச் சுற்றி வீடியோகள் எடுக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் வைத்து, யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.