குடமுருட்டி ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த தபோவனம், குடமுருட்டியில் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் அடுத்த தபோவனம், குடமுருட்டியில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு புண்யாகம், கோபூஜை, விஸ்வரூபம், அக்னி பூஜை, கும்ப பூஜை, ததுக்த ஹோமங்கள், யாத்ரா தானம், பூர்ணாகுதி, கலசம் புறப்பாடாகி ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் கோவில் மூல கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. உலகளந்த பெருமாள் கோவில் ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் மற்றும் கும்பகோணம் வள்ளலார் பள்ளி அனந்தகிரி சுவாமிகள் தலைமையில் கண்ணன் பட்டாச்சாரியார் வேத மந்திரங்களுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகி ஸ்ரீதரன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.