உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் திருநீலகண்டபுரம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர் திருநீலகண்டபுரம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் வடக்கு பகுதியில், அருள்மிகு விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், முருகன், துர்க்கை அம்மன், ஆகிய கோவில் அமைந்துள்ளது.

கோவில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகிற 9 ந் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி, 7 ந் தேதி காலை 6:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கணபதி வேள்வி, மகாலட்சுமி யாகம், நவக்கிரக யாகம், கோமாதா பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்‌. 10 மணிக்கு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, வாத்திய கோஷத்துடன் தீர்த்தம், முளைபாரிகை அழைத்து வருதல், மாலை 6:00 மணிக்கு, மகாசங்கல்பம், காப்பு கட்டுதல், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.‌ 8 ந் தேதி. காலை 9:00 மணிக்கு, மண்டப அர்ச்சனை, வேதிகார்ச்சனை, புதிய கோபுர கலசம், சாமிசிலைகளுக்கு அபிஷேகம், 11 மணிக்கு கோபுரத்தில் கலசம் வைத்தல், திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை மதியம் 1:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், உள்ளிட்ட நிகழ்ச்சி நடைக்கிறது. 9 ந் தேதி காலை 7:00 மணிக்கு கலசங்கள் திருக்கோவிலில் வலம் வருதல், 7:30 மணிக்கு கோபுர கலசம் கும்பாபிஷேகம் அதனைத் தொடர்ந்து, கருவறையில் இருக்கும் விநாயகர், முருகன், ஸ்ரீ மாகாளியம்மன், துர்க்கை, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 9:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை, நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, திருப்பூர் திருநீலகண்டபுரம் வடக்கு பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !