உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படித்துறை வரத விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

படித்துறை வரத விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சோழவந்தான்: சோழவந்தானில் மலையாளம் கிருஷ்ணய்யர் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள படித்துறை வரத விநாயகர் கோயிலில் ஆராதனை நடந்தது. அர்ச்சகர் கார்த்திக் தலைமையில் 18 வகையான திரவ அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்தனர். உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இதேபோல் திருவேடகம் விவேகானந்த கல்லூரி அருகே உள்ள சதுர்வேத கணபதி கோயிலில் சதுர்த்தி ஆராதனைகள் நடந்தது. அர்ச்சகர் கணேசன் தலைமையில் கணபதிக்கு 11 வகையான திரவ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சதுர்த்தி தின சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். பொதுமக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !