விருத்தாசலம் தாத்தா சாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :892 days ago
விருத்தாசலம் : விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டை ராமன் தெருவில் உள்ள தாத்தா சுவாமிகள், நிர்வாண முத்துக்குமார சுவாமிகள், சிவ பழனி ஞானி சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், இரவு 7:00 மணிக்கு வாது சாந்தி, 8:30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 4:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, கடம் புறப்பாடு நடந்தது. காலை 6:30 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பார்க்கவ வேல முன்னேற்ற சங்க மாநில தலைவர் வெங்கடேசன், ஹிந்து முன்னணி மாநில செயலர் சுனில் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.