உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை

சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை

கண்டாச்சிபுரம்; கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வர்ர கோவிலில் உச்சிகால பூஜை நடந்தது. அதனையொட்டி காலை 10:00 மணி முதல் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து கடன்நிவர்த்தி பரிகார பூஜையாக வாழைப்பூ கலச வழிபாடு நடைபெற்றது. பின், மூலவர் பாலேஸ்வரருக்கும், பாலாம்பிகை அம்மனுக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது. கெடார், விழுப்புரம், சூரப்பட்டு, வாழப்பட்டு, கண்டாச்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !