உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயிரவன்பட்டி ஆடி பிரமோத்ஸவம் 13ல் கொடியேற்றம்: ஜூலை 21ல் தேரோட்டம்

வயிரவன்பட்டி ஆடி பிரமோத்ஸவம் 13ல் கொடியேற்றம்: ஜூலை 21ல் தேரோட்டம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டியில் வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயிலில் 13ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடி பிரமோத்ஸவம் துவங்குகிறது. இக்கோயிலில் 11 நாட்கள்  ஆடி பிரதோத்ஸவம் நடைபெறும். நாளை விநாயகர் சன்னதி அருகே யாகசாலையில் காலை 5:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் பூர்வாங்க  பூஜைகள் துவங்குகின்றன. மாலை 4:45 மணிக்கு வாஸ்தசாந்தியுடன் பூஜைகள் துவங்கி ஆச்சார்யருக்கு காப்புக்கட்டப்படும். இரவு 8.00 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும். 13ம் தேதி காலை  8:00 மணிக்கு வெள்ளைசாத்தி சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலையில் யாகசாலைபூஜைகள் முடிந்து காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கும். இரவில் சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி வீதிஉலாவும் நடைபெறும். தொடர்ந்து ஜூலை21 ல் தேரோட்டமும், ஜூலை 22ல்  தீர்த்தவாரியும், ஜூலை23 ல் காலையில் பஞ்சமூர்த்திகள், வயிரவருக்கு அபிேஷகம், மாலையில் திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டினை ஏழக பெருந்திருவான வயிரவன்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !