உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி திருஆவினன்குடியில் காவடி ஆட அனுமதி

பழநி திருஆவினன்குடியில் காவடி ஆட அனுமதி

பழநி: பழநி திருஆவினன்குடியில் கோவை பக்தர்கள் காவடி ஆட அனுமதி வழங்கப்பட்டது. பழநி திருஆவினன்குடியில் காவடி மண்டபத்தில் பக்தர்கள் மேளதாளங்கள் அடிக்கவும், காவடி ஆட்டம் ஆடவும், கடந்த சில மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பக்தர்கள் காவடி ஆட்டம் ஆட வந்தனர். இதற்கு கோயில் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமையிலான ஹிந்து அமைப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின் பக்தர்கள் காவடி மண்டபத்தில் காவடி ஆட்டம் ஆடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !