காமாட்சி அம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை
ADDED :892 days ago
கோவை; கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள காமாட்சி அம்பாள் ஆலயத்திற்கு, கர்நாடக மாநிலம் தலக்காடு மடம் ஸ்ரீ பாலகிருஷ்ணானந்த சமஸ்தான சுவாமிகள் ஸ்ரீஸ்ரீ கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் வந்துள்ளார்.
அவர் ஜூலை, 3ம் தேதி முதல் செப்., 30ம் தேதி வரை அஷ்டோத்தர புஷ்பார்ச்சனை, அஷ்டோத்தர குங்கும அர்ச்சனை, சகஸ்ரநாம புஷ்பார்ச்சனை, ஸர்வ பூஜை (உதய அஸ்தமன பூஜை), செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும், ஸ்ரீ சக்ர பூஜை உட்பட சிறப்பு பூஜைகளை செய்ய உள்ளார். மாலை 6:00 முதல் 8:00 மணி வரை பூஜை, தீபாராதனையும், பின் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்குகிறார். பக்தர்கள் சுவாமிகளின் ஆசி பெறலாம்.