3,500 ஆண்டுக்கு முந்தைய கற்கருவிகள் திருப்பத்துார் அருகே கண்டெடுப்பு
ADDED :889 days ago
திருப்பத்துார்; திருப்பத்துார் அருகே, 3,500 ஆண்டுகள் பழமையான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. திருப்பத்துார், துாய நெஞ்சக் கல்லுாரி பேராசிரியர் பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறை பேராசிரியருமான சேகர், ஆய்வு மாணவர் தரணிதரன் மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், கந்திலி அருகே மேற்கொண்ட கள ஆய்வில், 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட, புதிய கற்கால தடயங்களான கற்கருவிகள் மற்றும் அவற்றை கூர்மைப்படுத்திய இடத்தை கண்டறிந்தனர்.