காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர மாநில சட்டத்துறை செயலாளர் தரிசனம்
ADDED :1187 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில சட்டத்துறை செயலாளர் சத்ய பாஸ்கர ராவ் தனது குடும்பத்தினருடன் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமியை சிறப்பு தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோயில் சார்பில் அதிகாரிகள் மிருத்யுஞ்சய சுவாமி சன்னதியில் கோவில் துணை நிர்வாக அதிகாரி சதீஷ் மாலிக் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சுவாமி அம்மையார்களின் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.