காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கானா பொதுப்பணித்துறை ஆணையர் தரிசனம்
ADDED :1188 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தெலுங்கானா மாநில பொதுப்பணித்துறை ஆணையர் அனிதா ராமச்சந்திரன் ஐஏஎஸ் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோயில் துணை நிர்வாக அதிகாரி சதீஷ் மாலிக் மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு, சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள தஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.