காளஹஸ்தி விக்ஞானகிரி மலை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கலாயாணம்
ஸ்ரீ காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான விக்ஞானகிரி மலை மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்திர ஆடி கிருத்திகை பிரம்மோற்சவ விழாவில் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கலாயாண உற்சவத்தை மிகவும் கோலாகலமாகக் நடைபெற்றது . சனிக்கிழமை இரவு நடைபெற்ற முருகப் பெருமானின் திருமணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் திருமண மண்டபத்திலிருந்து (குமாரசுவாமி திப்பா ) விக்ஞானகிரி மலைக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் மாவிலை தோரணங்களும் வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முன்னதாக சிவன் கோயிலில் உள்ள அலங்கார மண்டபத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தனர். தேர் வீதியில் உள்ள வாகன மண்டபத்தில் அம்பாரியில் பெருமானைப் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஊர்வலம் தொடங்கியது.
கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத் மற்றும் உறுப்பினர் குர்ரப்பசெட்டி ஆகியோர் சுவாமி அம்மையார்களுக்கு ஆரத்து எடுத்து விழாவைத் தொடங்கி வைத்தனர். சுவாமி அம்மையார்களின் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, வள்ளிதேவயானை சமேத சுப்ரமணிய சுவாமி ( உற்சவ மூர்த்திகளை) வாகன மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வெள்ளி அம்பாரி வாகனத்தில் (பிரதிஷ்டை செய்தனர்.) எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விக்ஞானகிரி மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருக்கல்யாண பந்தலில் மணமகனாக, சுப்ரமணிய சுவாமி அனைத்து விதமான ஆபரணங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தார். மணமகள்களாக, வள்ளி தெய்வானை அழகாக அலங்கரிக்கப்பட்டு மண்டபத்திற்குள் கொண்டுவரப்பட்டார். பஞ்ச பூதங்களின் சாட்சிகளாக அனைத்து தெய்வங்களின் முன்னிலையில் வேத மந்திரங்களை வேத பண்டிதர்கள் ஓதிக் கொண்டிருக்க, சுவாமி அம்மையார்களுக்கு மாங்கல்ய தாரணை சடங்குகளைச் செய்தனர். பின்னர், மணமக்கள் மீது அட்சதைகளைப் பொழிந்தனர். இந்த அற்புதக் காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.