சீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சன விழா
ADDED :14 hours ago
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன விழா நடந்தது.
தியாகதுருவத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருமஞ்சன விழா நடந்தது.
சர்வ அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கஸ்துாரி இளையாழ்வார் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.