உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுக்கரணை கோவிலில் தேர் திருவிழா விமரிசை

காட்டுக்கரணை கோவிலில் தேர் திருவிழா விமரிசை

அச்சிறுபாக்கம்: காட்டுக்கரணை கிராமத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் தேர் திருவிழா நேற்று, விமரிசையாக நடந்தது.

அச்சிறுபாக்கம் அடுத்த காட்டுக்கரணையில், பழமையான ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை ஒட்டி நேற்று 53ம் ஆண்டு தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 8:15 மணிக்கு, ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காட்டுக்கரணை சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !