அய்யா சரவிளக்கு – திருவிளக்கு பணிவிடை கோலாகலம்
ADDED :15 hours ago
மணலிபுதுநகர்: மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா, கொடியேற்றத்துடன் கடந்த 2ல் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான, அய்யா சரவிளக்கு, திருவிளக்கு பணிவிடை, நேற்று முன்தினம் இரவு, நடந்தது. முன்னதாக பக்தர்கள் கொண்டு வந்த பலகாரங்கள், பதியின் முன் படையலிடப்பட்டது. பின், பதியின் சரவிளக்குகள் மற்றும் முகப்பு விளக்குளில் தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, திருக்கல்யாண ஏடு வாசிக்கப்பட்டது. இதில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, ஏடு வாசிப்பை உச்சரித்தபடி, திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். இந்த விளக்கு பூஜையில் பங்கேற்றால், திருமண தடை நீங்கும்; குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
பின், குதிரை வாகனத்தில் எழுந்தருளி அய்யா பதிவலம் வந்தார். இன்று காலை 11:30 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது.