உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

பரமக்குடி கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள கோயில்களில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.

*பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் பைரவர் தனி சன்னதியில் அருள் பணிக்கிறார். இங்கு நேற்று இரவு தேய்பிறை அஷ்டமி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினார்.

*பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

*பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் நடந்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் வடக்கு நோக்கி பைரவர் அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் வழிபாடு நடத்தினால் எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !