உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபட்டிணம் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

பெரியபட்டிணம் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

பெரியபட்டினம்: பெரியபட்டினம் ஊராட்சி வடக்கு புதுக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. கடந்த ஜூலை 2 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவு கோயில் முன்புற வளாகத்தில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று இரவு மூலவர் முத்துமாரியம்மன், செல்வவிநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் செய்யப்பட்டது. இன்று கோயில் முன்புறம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணி அளவில் கரகம் முன்னே செல்ல பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. காளியூரணி குளத்தில் பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வடக்கு புதுக்குடியிருப்பு கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !