/
கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகப் பெருமானுக்கு தங்க விபூதி பட்டை : பக்தர் நன்கொடை
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகப் பெருமானுக்கு தங்க விபூதி பட்டை : பக்தர் நன்கொடை
ADDED :1187 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம், ஐரால மண்டலம் காணிப்பாக்கம், வரசித்தி விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வர சுவாமி என்ற பக்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூபாய் 4,50,000 மதிப்புள்ள தங்க விபூதி பட்டையை சுவாமிக்கு நன்கொடையாக கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் இடம் வழங்கினார். இவர்களுக்கு முன்னதாக கோயில் துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி மற்றும் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்த பின்னர் நன்கொடையாளருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.