மேல்மலையனுார் பிரம்மா கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
ADDED :885 days ago
செஞ்சி: மேல்மலையனுார் பிரம்மா கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. மேல்மலையனூர் லட்சுமிநாராயண அஷ்டலட்சுமி சித்தர் சைவ பீடத்தில் கடந்த மே மாதம் 25ம் தேதி பிரம்மா சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு கணபதி பூஜையும், விசேஷ் ஹோமமும், பிரம்மா சிலைக்கு சிறப்பு அபிஷேக, அங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் முனியம்மாள், சதசிவம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.