உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் ஆனி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் ஆனி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் ஆனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது. அருப்புக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் ஆனி பொங்கல் விழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒரு வாரம் நடக்கும் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் பொங்கல் மற்றும் முளைப்பாரி நகர் வல ஊர்வலம் நடந்தது. திருவிளக்கு பூஜைகள் நடந்தது. பத்ரகாளி அம்மனுக்கு பெரும் பூஜை, மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார் உறவின் முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !