ஆனி கார்த்திகை, ஏகாதசி விரதம்: பெருமாள், முருகனை வழிபட வாழ்வு சிறக்கும்!
ADDED :886 days ago
ஏகாதசி பெருமாளை வழிபடுவதற்கு உரிய நாள். ஒரு வருட காலத்தில் வருகின்ற மற்ற ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஆனி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் வாழ்வில் உயரிய நிலையை பெறலாம். ஏகாதசி விரதம் இருப்போர் அளவில்லா செல்வம், உயரிய நிலையை பெறலாம். பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பானதாகும். கார்த்திகை விரதமிருந்து வழிபடுவோர் சகல பாக்கியங்களையும் பெறுவர். ஏகாதசி, கார்த்திகையான இன்று விஷ்ணு, கந்தனை வணங்கி கவலையின்றி வாழ்வோம்.