காமம் தவிர்த்தால் இறைவனருள் கிடைக்கும்!
ராமேஸ்வரம்: கோபம், காமம் தவிர்த்தால், இறைவன் அருள் கிடைக்கும், என திருச்சி கல்யாணராமன் பேசினார். ராமேஸ்வரம் சிருங்கேரி சங்கர மடத்தில் நடந்து வரும், வில்லிபாரத தொடர் சொற்பொழிவில், "நச்சுப்பொய்கை என்ற தலைப்பில் நேற்று, இவர் பேசியதாவது:அர்ச்சுனன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். காமத்தை சோதிக்க ஊர்வசி வந்தாள். அர்ச்சுனன், சிவநாமத்தை ஜெபித்ததால், தோற்றுப்போனாள். கோபம் வருகிறதா என சோதிக்க, அர்ச்சுனனின் வயதான தந்தை தேவேந்திரர் வேடத்தில் வந்தாள். பெயர், எந்த ஊர் என திரும்ப, திரும்ப கேட்டாள். அர்ச்சுனன் பொறுமையாக பதிலளித்தான்.அர்ச்சுனனை கொல்ல, துரியோதனன், மூர்காசூரனை அனுப்பினான். பன்றி வடிவம் தாங்கி மூர்காசூரன் வந்தான். அர்ச்சுனனின் தவ வலிமையால், சிவன், வேடன் உருவத்தில் பார்வதி, முருகன், சிவகணங்கள் உடன் காக்க வந்தார். இருவரும் பாணம் தொடுத்து, அர்ச்சுனனை கொன்றனர். இப்பிரச்னையில், அர்ச்சுனன், சிவனுக்கு யுத்தம் மூண்டது. சிவன் என்பதை உணர்ந்த அர்ச்சுனன், பாசுபத அஸ்திரம் பெற்றான். ÷தவலோகத்திற்கு அர்ச்சுனனை அழைத்தான்.உலகமே ஊர்வசி அழகில், மயங்கிய போது, அர்ச்சுனன் அழகில், ஊர்வசி மயங்கினான். அவளிடம், "நீ எனது தாய், கெட்ட எண்ணத்துடன் வராதே என்றான் அர்ச்சுனன். பெண்ணை அடைய முயல்வதை விட, பெண்ணே அடைய வரும் போது, உறவு முறை கூறி அர்ச்சுனன் போல இந்திரியத்தை, இளைஞர்கள் அடக்க வேண்டும். கோபம், காமம்கைவிட்டால், இறைவன் அருள் கிடைக்கும், என்றார்.