உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவு

மகா மாரியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் சந்தை கடை மைதானம் அருகே மகா மாரியம்மன் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மூன்று நிலை விமானம், ஏக மண்டபம் அமைத்து கோயில் வளாகத்தில் விநாயகர் திருக்கோயில், துர்க்கை அம்மன் திருக்கோயில், கன்னிமார் நவ கோள்களுக்கு தனி கோயில், விமானத்தில் சூரிய கடவுள் குதிரை வாகனத்தில் காட்சி தரும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நிறைவு விழாவை ஒட்டி கோவில் வளாகத்தில் வேள்வி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் மகா மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு வழியாக மீண்டும் கோவில் வளாகத்தை அடைந்தது. நிறைவு விழாவை ஒட்டி அபிஷேக ஆராதனை, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !