உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி கடைசி வெள்ளி: செல்வம், நீண்ட ஆயுளுக்கு மகாலட்சுமியை வழிபடுங்க..!

ஆனி கடைசி வெள்ளி: செல்வம், நீண்ட ஆயுளுக்கு மகாலட்சுமியை வழிபடுங்க..!

மகாலட்சுமியின் அருளைப் பெற உகந்த கிழமை வெள்ளி. இப்பிறவியில் செல்வ வளமும், பிறவி முடிந்த பின் மோட்சமும் தருபவள் மகாலட்சுமி. துவாதசியான இன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்தால் ஏகாதசி விரத பலன் கிடைக்கும். வீட்டில் லட்சுமியின் அம்சமான துளசி மாடம் வைத்து வழிபட சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். சுக்கிரனின் அதிதேவதையான மகாலட்சுமியை இன்று பூஜிப்பது சிறப்பு. லட்சுமியின் அருள்பெற வீட்டில் நீரும், உப்பும் குறைவின்றி இருக்க வேண்டும், மாதுளை செடி இருக்கும் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இன்று விளக்கேற்றி வழிபட லட்சுமிதேவி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !