உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைவயல் காளிகோயில் பூச்சொரிதல் விழா ; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பிள்ளைவயல் காளிகோயில் பூச்சொரிதல் விழா ; பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிவகங்கை, : சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர்.

இக்கோயிலில் 69 ம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஜூலை 7 ல் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அம்மன் சன்னதி முன் பக்தர்கள் பூக்குழி இறங்கியும், பூக்கரகம் எடுத்தும் நேர்த்தி செலுத்தினர். நேற்று அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சகல திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பொங்கல் வைத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்தி செலுத்தினர். நேற்று மாலை 4:00 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நகரில் உள்ள பல்வேறு கோயில்களில் இருந்து பூத்தட்டுக்களை ஊர்வலமாக எடுத்து கோயிலுக்கு வந்தனர். பூச்சொரிதல் விழாவில் கருணாம்பிகை கம்ப்யூட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் நித்யா கண்ணப்பன், சிவகங்கை ஆரியபவன் ஓட்டல் உரிமையாளர்கள் கருப்பையா, ரகுபாஸ்கர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகால் உரிமையாளர் சுந்தரமாணிக்கம், கிராம உதவியாளர் அழகர்சாமி, ராஜேஸ்வரி, தேன்மொழி, ஹரிகிருஷ்ணா, மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், அருட்பெருஞ்ஜோதி சத்ய தர்மசாலை செயலாளர் செந்தில், அன்னபூரணி ஓட்டல் உரிமையாளர் லெட்சுமணன், ரவிக்குமார் எக்ஸ்ரே உரிமையாளர் இளங்கோவன், ஏ.ஆர். ஷாமில் உரிமையாளர் சந்திரன், ஏ.சி.எஸ்., அரிசிக்கடை உரிமையாளர் சண்முகநாதன், மலைராம் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் பாண்டிவேல், சிவகங்கை ஸ்டாம்ப் வெண்டர் சுந்தரபாண்டியன், அண்ணாமலையார் ஏஜன்சி உரிமையாளர் ஜெயசக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கினர். நேற்று இரவு நகர் முழுவதும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் நாராயணி தலைமையில், பூஜாரி சங்கு மணிகண்டன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !