கதலி நரசிங்கபெருமாள் கோயிலில் மழை நீர் கடத்த வடிகால் அமைப்பு
ADDED :891 days ago
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயபணிகள் சமீபத்தில் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோயிலில் சுற்றுச்சுவர், தரைத்தளம், கருவறை, கோயில் மேல் தளம், கோபுரம்ஆகியவற்றில் புனரமைப்பு பணிகள் ரூபாய்பல லட்சம் செலவில் நடந்து வருகிறது. கோயில் வளாகத்தின் சுற்றுப்பிரகாரத்தில் சேரும் மழை நீரால் பாதிப்பு ஏற்பட்டது. தேங்கும் மழை நீரால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இதனை கருத்தில் கொண்டு கோயில் வளாகத்தில் தேங்கும் மழை நீரை வடிகால் மூலம் கடத்தி கோயில் முன்புறம் உள்ள தெப்பத்தில் சேரும்படி கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. உபயதாரர் பங்களிப்பில் பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிந்தபின் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக ஹிந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.